உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு

திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி நீலாவதி 47. இவர் டாடா ஏஸ் வாகனத்தில் மளிகை பொருட்களை ஏற்றி கிராமங்களில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் கணவருடன் அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு இரவு 11:00 மணியளவில் வீடு திரும்பினார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 8 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நீலாவதி அளித்த புகாரின்படி திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ