உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின் கம்பம் சாய்ந்ததால் கும்மிடியில் பரபரப்பு

மின் கம்பம் சாய்ந்ததால் கும்மிடியில் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரையில் பி.டி.ஓ., அலுவலகம், எம்.எல்.ஏ., அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், அரசு பொது மருத்துவமனை, கால்நடை மருந்துவனை உள்ளிட்டவை உள்ளன. அதனால் கோட்டக்கரை பிரதான சாலை எப்போது பரபரப்பாக காணப்படும். அந்த சாலையில் உள்ள மின் கம்பம் ஒன்றின் அடிப்பகுதியில், உள்ளிருக்கும் கம்பிகள் தெரியும் நிலையில் ஆபத்தாக நின்றுக்கொண்டிருந்தது. அதை மாற்ற வலியுறுத்தி, கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் அப்பகுதி மக்கள், பல முறை புகார் தெரிவித்தனர். அந்த மின் கம்பம் மாற்றப்படாத நிலையில், நேற்று காலை மின் வினியோகம் இருந்த நேரத்தில், அந்த மின்கம்பம் திடீரென சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அந்த சாலையை, பகுதி மக்கள் அடைத்தனர். தகவல் அறிந்து சென்ற மின் துறையினர் அப்பகுதியில் மின் வினியோகத்தை நிறுத்தினர். பின்னர், புதிய மின் கம்பம் ஒன்றை நட்டு, மின் கம்பிகளை அதில் மாற்றி சாய்ந்த மின் கம்பத்தை அகற்றினர். சீரமைப்பு பணிகளுக்கு பின் மீண்டும் பழைபடி மின் இணைப்பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ