உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூரில் வழிப்பறி திருடன் கைது

மீஞ்சூரில் வழிப்பறி திருடன் கைது

மீஞ்சூர்:சென்னை, மாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 50. இவர், நேற்று முன்தினம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ரயில் நிலைய சாலை வழியாக நடந்து சென்றார்.அப்போது, பைக்கில் வந்த மர்மநபர், சேகரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 1,500 ரூபாயை பறித்து சென்றார். இதுகுறித்து வழக்கு பதிந்த மீஞ்சூர் போலீசார், நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த மதன், 32, என்பவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இவர் கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இதையடுத்து நேற்று, மீஞ்சூர் பகுதியில் பதுங்கியிருந்த மதனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ