உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூதாட்டியிடம் நகை திருடிய மூன்று பெண்கள் கைது

மூதாட்டியிடம் நகை திருடிய மூன்று பெண்கள் கைது

ஊத்துக்கோட்டை: திருவாலங்காடு, ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த பாப்புலம்மா, 75, கடந்த, 19ம் தேதி திருவள்ளூர் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்தார்.திருவள்ளூர் செல்லும் பேருந்து வந்தவுடன் அதில் ஏறி உள்ளார். இருக்கையில் அமர்ந்த பின் பையில் இருந்த, 7 சவரன் நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்படி ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.சம்பவ இடத்தில் இருந்த 'சிசிடிவி' கேமராவில் பார்த்தபோது மூன்று பெண்கள் மூதாட்டியின் பையில் இருந்த பர்சை எடுத்தது தெரியவந்தது. அவர்கள் திருத்தணி அடுத்த நல்லாட்டூர் காலனியைச் சேர்ந்த அனிதா, 37, கல்யாணி, 24, நதியா, 30 என்பது தெரியவந்தது. மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர். நகை பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை