உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீடு வாடகை எடுத்து கஞ்சா விற்ற இருவர் கைது

வீடு வாடகை எடுத்து கஞ்சா விற்ற இருவர் கைது

புழல்:புழல், அறிஞர் அண்ணா நகர், 2வது தெருவில், தனிப்படை போலீசார், மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவ்வழியில், வேகமாக சென்ற 'ஆக்டிவா ஸ்கூட்டர்' வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, சீட்டுக்கு அடியில், சிறு சிறு பாக்கெட்டுகளில் கஞ்சா இருந்தது தெரிந்தது.விசாரணையில், புளியந்தோப்பைச் சேர்ந்த ராஜி, 42, மற்றும் பொன்னம்மாள், 37, ஆகியோர் என தெரிந்தது. ஆந்திரா மாநிலத்தில் இருந்து பேருந்தில் கஞ்சா கடத்தி வரும் இவர்கள், புழல் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். பின், கஞ்சாவை சிறு சிறு பாக்கெட்டுகளில் அடைத்து, ஸ்கூட்டரில் எடுத்து சென்று, மெரினா கடற்கரை உட்பட, சென்னையில் பல இடங்களில் விற்பனை செய்தது தெரிய வந்தது. மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை