உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போலீசாருக்கு மிரட்டல் இருவர் கைது

போலீசாருக்கு மிரட்டல் இருவர் கைது

தாமரைப்பாக்கம், : தாமரைப்பாக்கம் அடுத்த பூச்சி அத்திப்பேடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, வெங்கல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது செங்குன்றத்தில் இருந்து பூச்சி அத்திப்பேடு நோக்கி வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்த இருவர் போலீசாரிடம் தகராறு செய்தனர். பைக்கில் வந்தவர்கள் கத்தியை காட்டி போலீசாரை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். போலீசார் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் கோவில்பதாகை, சோமசுந்தரம், 21, ஆவடி சிபிராஜ், 19, என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ