உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் விபத்தில் இளைஞர் பலி

பைக் விபத்தில் இளைஞர் பலி

கனகம்மாசத்திரம்:திருத்தணி அடுத்த பி.ஆர்.பள்ளியை சேர்ந்தவர் விஜய், 24. இவர் கடந்த மாதம் 20ம் தேதி தெக்களூர் காலனியை சேர்ந்த மணிகண்டன், 29 என்பவருடன் டி.வி.எஸ்., அப்பாச்சி இருசக்கர வாகனத்தில் சென்றார்.கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடு குப்பம் சந்திப்பு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்தனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மணிகண்டன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜய் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த விஜய் நேற்று காலை உயிரிழந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை