உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லஞ்சம் கேட்டு சிக்கிய மண்டல அதிகாரி

லஞ்சம் கேட்டு சிக்கிய மண்டல அதிகாரி

முகப்பேர்: அம்பத்துார் மண்டலம், 89வது வார்டுக்கு உட்பட்ட முகப்பேர் பகுதியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வாவின் உறவினர்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள், தங்களது வீட்டை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக மணல், ஜல்லியை வீட்டின் அருகே சாலையில் இறக்கி வைத்திருந்தனர்.அவை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, அம்பத்துார் மண்டல 89வது வார்டு உதவி பொறியாளர் ஸ்ரீதரன், 49, கட்டட காண்டிராக்டரை எச்சரித்துள்ளார்.மேலும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 5,000 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கேட்ட அதிகாரி குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, அவரை பணியிடை நீக்கம் செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ