உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடமாநில வாலிபரிடம் 1 கிலோ கஞ்சா பறிமுதல்

வடமாநில வாலிபரிடம் 1 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி மின்சார ரயிலிலிருந்து வடமாநில வாலிபர் ஒருவர் இறங்கி வந்தார்.அவரிடம் சந்தேகத்தின் பேரில் திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் வீ.கே.செபாஸ்டியன் மற்றும் போலீசார் விசாரித்த போது, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜய்கோபிமண்டல், 32, என தெரிய வந்தது. மேலும், அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பின், வடமாநில வாலிபர் மற்றும் கஞ்சாவை திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 40,000 ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை