உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 10 ஆண்டுகள் போராட்டத்திற்கு விடிவு; அகூரில் ஆரம்ப துணை சுகாதார நிலையம்

10 ஆண்டுகள் போராட்டத்திற்கு விடிவு; அகூரில் ஆரம்ப துணை சுகாதார நிலையம்

திருத்தணி : திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, அகூர் கிராமத்தினர் கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதுதவிர, கடந்த, 2014ம் ஆண்டு முதல் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சியிலும் அகூர் பகுதியினர் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், தீர்மானம் நிறைவேற்றி வந்தனர்.இது குறித்து நம் நாளிதழிலும் தொடர்ந்து செய்தி வெளியாகி வந்தது. இதையடுத்து, துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம், 38.40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.இதற்கான கட்டடம் கட்டும் பணிகளுக்கு நேற்று அடிக்கல் நடவு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். இதில் திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை