உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 1,010 கன அடி நீர் வரத்து

 பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 1,010 கன அடி நீர் வரத்து

ஊத்துக்கோட்டை: பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு, 1,010 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான, பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி. பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து ஆகியற்றால் நீர்மட்டம் உயர்ந்தது. தொடர் மழையால் ஏற்பட்ட நீர்வரத்தால், நீர்த்தேக்கம் முழுதும் நிரம்பும் நிலை ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது மழைநீர் வினாடிக்கு, 1,010 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. நீர்த்தேக்கத்தில் தற்போது, 3.114 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 34.90 அடி. மதகு வழியே வினாடிக்கு, 100 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. அங்குள்ள இணைப்பு கால்வாய் வழியே வினாடிக்கு, 500 கன அடி வீதம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை