உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 14 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 14 பேர் கைது

திருத்தணி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன், தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற, 14 பேரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி தாலுகா, ராமாபுரத்தைச் சேர்ந்தவரும், லோக் ஜன சக்தி கட்சி மாநில இளைஞரணி துணைத் தலைவருமான பால்ராஜ் தலைமையில், அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 13 பேர், நேற்று காலை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலுக்கு வந்தனர். பின், திருத்தணி தாசில்தார் பணம் பெற்று, போலியாக பட்டாக்கள் வழங்குவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் மற்றும் போலீசார், 14 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை