உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாய் கடித்து 15 பேர் பாதிப்பு பழவேற்காடில் பரபரப்பு

நாய் கடித்து 15 பேர் பாதிப்பு பழவேற்காடில் பரபரப்பு

பழவேற்காடு: பழவேற்காடு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை அவ்வப்போது சாலையில் செல்வோரை விரட்டி கடித்து வருவதால் கிராமவாசிகள் அச்சத்துடன் இருக்கின்றனர்.நேற்று பழவேற்காடு பகுதியில் தெருநாய்கள் கடித்து, 15 பேர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். ஒரே நாளில், 15பேர் தெருநாய்களால் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாய்கடிக்கான மருந்துகள் மருத்துவமனையில் குறைவாக இருந்ததால், திருவள்ளூர் மருந்து கிடங்கில் இருந்து வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.பழவேற்காடு பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கிராமவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கான நடவடிக்கை இல்லாத நிலையில், தற்போது ஒரே நாளில், 15பேர் நாய்கடிக்கு ஆளாகி உள்ளனர். இனியும் காலம் தாழ்த்தாமல் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை