உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பரேஸ்புரம் கிராமத்தில் 2 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

 பரேஸ்புரம் கிராமத்தில் 2 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

திருவாலங்காடு: பரேஸ்புரத்தில் சுடுகாடு பாதைக்காக 2 பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. திருவாலங்காடு ஒன்றியம், வேணுகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது பரேஸ்புரம் கிராமம். இங்கு சுடுகாடுக்கு செல்லும் வழி மண் பாதையாக உள்ளது. இங்கு 40 முதல் 80 ஆண்டுகள் பழமையான, 30க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் சுடுகாடு செல்லும் பாதை செடிகள் முளைத்து இருந்ததால் சீரமைக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த சிலர் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பழமையான இரண்டு பனை மரங்களை அகற்றியுள்ளனர். இதுகுறித்து, தகவல் அறிந்த திருவாலங்காடு வருவாய் ஆய்வாளர் சென்று ஆய்வு செய்தார். பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ