உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிலத்தகராறில் மோதல் 4 பேர் படுகாயம்

நிலத்தகராறில் மோதல் 4 பேர் படுகாயம்

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன், 50. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயா, 39, என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் கஜேந்திரன் தன் நிலத்தில் ஏர் உழுதுக் கொண்டிருந்த போது விஜயா, அவரது சகோதரி சுமதி, 42, உறவினர்கள் முனிரத்தினம், ரமேஷ் மற்றும் தனஞ்செழியன் ஆகியோர் சென்று தகராறு செய்தனர்.இதையடுத்து கஜேந்திரன் உறவினர்கள் சந்தியா, உமா மற்றும் பாரதி ஆகியோர் அங்கு சென்றனர். இரு தரப்பினரும் உருட்டை கட்டைகளுடன் மோதி கொண்டனர்.இதில், விஜயா, சுமதி, கஜேந்திரன், சந்தியா ஆகிய நால்வரும் படுகாயம் அடைந்தனர்.இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் இரு தரப்பினர் கொடுத்த புகாரின்படி, எட்டு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை