உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 6 வழிச்சாலை திட்டப்பணி 23 இருளர் குடும்பத்திற்கு மாற்று இடம்

6 வழிச்சாலை திட்டப்பணி 23 இருளர் குடும்பத்திற்கு மாற்று இடம்

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் இருந்து ஆந்திர மாநிலம் சித்துார் வரை, ஆறுவழிச் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு தாலுகாக்களில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து, 1,300 ஏக்கர் வரை நிலங்களை அரசு கையப்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக, பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட இருளர்கள் வசிக்கும் இடம், சாலை அமைக்கும் பணிக்காக எடுக்கப்படும் நிலை ஏற்பட்டது.இதில், 23 குடும்பத்தினர் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, பாதிக்கப்பட்ட, 23 குடும்பத்தினரைச் சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மாற்று இடம் வழங்க கோரிக்கை மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவுபடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சுகபுத்ரா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பாதிக்கப்படும் இருளர் குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை