உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஒரே நாளில் 7 நாய்கள் உயிரிழப்பு

ஒரே நாளில் 7 நாய்கள் உயிரிழப்பு

பொன்னேரி:பொன்னேரி அடுத்த சின்னகாவணம், பெரிதம்பி தெருவில், நேற்று மாலை, அடுத்தடுத்து ஏழு நாய்கள் மர்மமான முறையில் வாயில் நுரைதள்ளி உயிரிழந்தன. சில நாய்கள் காணவில்லை எனவும் குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், தினமும் உணவு போட்டு வளர்த்த நாய்கள், ஒரே நேரத்தில் இறந்தது, அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. மர்மமான முறையில் இறந்த நாய்களின் உடலை கைப்பற்றி, கூராய்வு செய்து இறப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை