| ADDED : ஜன 20, 2024 11:24 PM
பழவேற்காடு, பழவேற்காடு பஜார் பகுதிக்கும், கடற்கரையோர கிராமங்களுக்கும் இடையே உள்ள ஏரியில், கடந்த, 2010ல் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. பாலத்தின் இருபுறமும் பாதசாரிகள் வசதிக்காக கம்பங்கள் அமைத்து மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.காலப்போக்கில் அவை உரிய பராமரிப்பு இன்றி போனது. இதனால் மின்கம்பங்கள் துருப்பிடித்து, சேதம் அடைந்து ஒவ்வொன்றாக உடைந்து கீழே விழுகிறது. தற்போது பாலத்தில் பெரும்பாலான இரும்பு மின்கம்பம் உடைந்து, பாதசாரிகளுக்கு இடையூறாக கீழே விழுந்து கிடக்கிறது. இரவு நேரங்களில் பாலம் இருண்டு கிடப்பதால், பாதசாரிகள் கீழே விழுகின்றனர்.மேற்கண்ட பாலத்தில் புதிய கம்பங்கள் அமைத்து மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என கிராமவாசிகள், சமூக ஆர்வலர்கள் மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.