| ADDED : பிப் 22, 2024 10:56 PM
திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 48 ஆடிட்டராக பணிபுரிந்து வரும் இவர் திருவள்ளூர் கேன் பின் ஹவுசிங் பைனான்ஸில் 14 லட்சத்து 50,000 ரூபாய் 2016-ல் வீடு கட்டுவதற்கான கடன் வாங்கி இருந்தார். மாதம் தவணைத் தொகையாக 14,500 ரூபாய் கட்டி வந்துள்ளார்.இந்நிலையில் திடீரென்று எவ்வித முன் அறிவிப்புமின்றி ஏப்ரல் 2023 மாதத்தவணையை 14 ஆயிரத்து 500 ரூபாய்கு பதிலாக 15, 847 ரூபாயாக உயர்த்தி வசூலித்துள்ளனர்.இது குறித்து தனியார் நிதி நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டபோது எவ்வித முறையான பதிலும் கிடைக்கவில்லை. இதை எதிர்த்து ராஜேந்திரன் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த, திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் லதா மகேஸ்வரி இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். ராஜேந்திரனுக்கு வீட்டு தவணையை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டது தவறு என்றும், பழைய மாத தவணையான 14 ஆயிரத்து 500-ஐ வசூலிக்க வேண்டுமெனஉத்தரவிட்டார். மேலும் அபராதமாக 50,000 ரூபாய் மற்றும் வழக்கு செலவு தொகை 5,000 ரூபாய் என, மொத்தம் 55,000 ரூபாய் கேன் பின் ஹவுசிங் நிதி நிறுவனம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.