உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புயலில் விழுந்த மரம் அகற்ற கோரிக்கை

புயலில் விழுந்த மரம் அகற்ற கோரிக்கை

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த மேலுார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திருவுடையம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மாமரம் ஒன்று, கடந்த மாதம் வீசிய 'மிக்ஜாம்' புயலின்போது வேருடன் பெயர்ந்து கோவில் சுற்றுச்சுவரின்மீது விழுந்தது. மரக்கிளைகள் கோவில் அருகே உள்ள சாலையில் இருந்ததால், அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தவை மட்டும் அகற்றப்பட்டன. அதே சமயம், சுற்று சுவரின் மீதுள்ள மரம் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை