உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிறவி குறைபாடு குழந்தைகளுக்கு வரப்பிரசாதம் தெராபெட்டிக் பூங்காவில் நவீன சிகிச்சை வசதி

பிறவி குறைபாடு குழந்தைகளுக்கு வரப்பிரசாதம் தெராபெட்டிக் பூங்காவில் நவீன சிகிச்சை வசதி

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மத்திய, மாநில அரசு இணைந்து, குழந்தைகள் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் மையத்தை துவக்கி உள்ளது. இங்கு, மூன்று மருத்துவர்கள், ஒன்பது ஊழியர்கள் என, 12 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இம்மையத்தில், பிறந்த குழந்தை முதல் 18 வயது உடைய குழந்தைகளுக்கு, அவர்களது குறைபாடுக்கு ஏற்ப உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு, ஆறு விதமான சிகிச்சை அளிக்க, 'தெராபெட்டிக் பூங்கா' அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு அளிக்கப்படும் சிகிச்சை வசதி குறித்து, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரேவதி, சிகிச்சை மைய பொறுப்பாளர் மருத்துவர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் கூறியதவாவது:'தெராபெட்டிக் பூங்காவில், 100க்கும் மேற்பட்ட, பிறவி குறைபாடுடைய குழந்தைகளுக்கு, விளையாட்டுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, புலன்களை ஒருங்கிணைக்கும் வகையில், பிறவி குறைபாடுடைய குழந்தைகள் பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல் மற்றும் தொடு உணர்வு அறியும் வகையில், வண்ணங்கள், பூக்கள், செடிகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சை மூலம், பிறவி குறைபாடுடைய குழந்தைகளை, அவர்களின் குழந்தை பருவத்திலேயே கண்டறிந்து, அதற்கான சிகிச்சை அளிப்பதன் வாயிலாக, சாதாரண மனிதர்களை போல் மாற்ற இயலும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை