உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதருக்குள் மாயமாகி வரும் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம்

புதருக்குள் மாயமாகி வரும் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம்

திருவள்ளூர்: கடம்பத்துார் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருப்பாச்சூர் ஊராட்சி. இப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் உள்ள விநாயகர் கோவில் அருகே ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கடந்த 2018-19ம் ஆண்டு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்டு சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் கட்டப்பட்டது.இந்த குடிநீர் நிலையம் கட்டப்பட்டு ஐந்தாண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் புதருக்குள் மாயமாகி வீணாகி வருகிறது.அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்து சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராதது பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருப்பாச்சூர் ஊராட்சியில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி