திருவள்ளூர்:திருவள்ளூர் காவல் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி என, ஐந்து காவல் உட்கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.இங்கு, சட்டம் - ஒழுங்கு மற்றும் 24 காவல் நிலையங்கள், செயல்பட்டு வருகின்றன. மேலும், ஐந்து அனைத்து மகளிர் காவல் நிலையம், நான்கு கலால் காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.பார்லி., பொதுத்தேர்தலை முன்னிட்டு, தற்போது, மாவட்டம் முழுதும் காவல் துறையில் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை பணியிடமாற்றம் செய்ய, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.இதையடுத்து, முதல்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும், 23 எஸ்.ஐ.,க்கள் பணியிடமாற்றம் செய்து, எஸ்.பி., சிபாஸ் கல்யாண் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஆறு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர், முதல்நிலை காவலர், கிரேட் 1 போலீசார், பெண் போலீசார், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் என, 175 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.பெயர் தற்போதைய பணியிடம் புதிய இடம்
இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்ற விபரம்
பி.லோகேஸ்வரி மதுவிலக்கு அமல் பிரிவு, மதுராந்தகம் திருப்பாலைவனம்ஜி.மதியரசன் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, செங்கல்பட்டு திருத்தணிஎஸ்.மங்களபிரியா மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம், திருவள்ளூர்ஆர்.நந்தகோபால் செய்யூர் மாவட்ட குற்றப்பிரிவு, திருவள்ளூர்.ஏ.ரவிகுமார் நில அபகரிப்பு பிரிவு, செங்கல்பட்டு மணவாளநகர்.வி.நாகராஜன் காஞ்சிபுரம் போக்குவரத்து பிரிவு, திருவள்ளூர்.