உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேர்தல் நடத்தை குறித்து அனைத்து கட்சி கூட்டம்

தேர்தல் நடத்தை குறித்து அனைத்து கட்சி கூட்டம்

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில், தேர்தல் துணை வட்டாட்சியர் கந்தசாமி முன்னிலை வகித்தார். அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், 25 பேர் பங்கேற்றனர்.கார்களில் கட்சி கொடிகள் அகற்ற வேண்டும். பொது இடங்களில் கட்சி விளம்பரங்கள் செய்யக் கூடாது. பிரசார வாகனங்களுக்கு அனுமதி பெறும் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி