உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செல்லப்பிராணிகள் காப்பகத்துக்கு சீல் விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை

செல்லப்பிராணிகள் காப்பகத்துக்கு சீல் விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை

சென்னை,சென்னை புறநகரில் பல்வேறு இடங்களில், தனியார் விலங்குகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளான நாய், பூனை உள்ளிட்டவற்றை, கட்டண அடிப்படையில் இவை, பராமரித்து வருகின்றன.இந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், கார்டியன் விலங்குகள் காப்பகம் செல்பட்டு வருகிறது. வீடுகளில் செல்ல பிராணிகளை வளர்க்க முடியாத நிலையில் இருப்போர், அவற்றை இங்கு ஒப்படைக்கின்றனர். அவர்களிடம் கட்டணம் வசூலித்து, செல்ல பிராணிகளை இதன் நிர்வாகிகள் பராமரிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இங்கு விடப்பட்ட செல்ல பிராணிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என, பிராணிகள் நல வாரியத்துக்கு புகார் வந்தது.இது குறித்து, தமிழக விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிக்கை:ஒரகடத்தில், தனியார் காப்பகத்தில் செல்ல பிராணிகள் முறையாக பராமரிக்கப்படாமல் துன்புறுத்தப்படுவதாக புகார் வந்தது. இங்குள்ள விலங்குகள் முறையான உணவு இன்றி தவிப்பதும் தெரிய வந்தது. இதன் அடிப்படையில், அந்த காப்பக நிர்வாகிகளுக்கு 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டது.நிர்வாகிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் துணையுடன் அந்த காப்பகம் நேற்று, 'சீல்' வைக்கப்பட்டது.அங்கிருந்து மீட்கப்பட்ட விலங்குகள், வேறு இடங்களில் முறையான அங்கீகாரத்துடன் செயல்படும் காப்பகங்களுக்கு மாற்றப்பட்டன. இந்த காப்பக நிர்வாகிகள் மீது, வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ