உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பம் வரவேற்பு

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பம் வரவேற்பு

திருவள்ளூர்:சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியோர், பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஆண்டு தோறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முன்மாதிரியான பங்களிப்பு அளித்து வரும், 100 தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுடன், தலா 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். நடப்பு ஆண்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய, நிறுவனம், கல்வி நிறுவனம், குடியிருப்போர் நல சங்கம், தனிநபர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தோர், விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளமான www.tnpcb.gov.inஎன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து, ஏப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்