உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டாஸ்மாக் கடை உட்பட 4 இடங்களில் திருட முயற்சி

டாஸ்மாக் கடை உட்பட 4 இடங்களில் திருட முயற்சி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சி வெண்மனம்புதுார் பகுதியில் அமைந்துள்ளது அரசு டாஸ்மாக். இங்கிருந்து காரணி செல்லும் சாலையோரம் மளிகை கடை, 2 பங்க் கடைகள் என, நான்கு கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, இந்த கடைகளின் முன்புற பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. ஆனால் கடைகளின் பக்கவாட்டு பகுதியில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்க முடியாததால் கடைகளில் பொருட்கள் திருடு போகவில்லை.இதுகுறித்து கடை உரிமையாளர்களில் ஒருவரான அருண், 35,என்பவர் நேற்று காலை கடம்பத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணைக்கு வந்த போது, சந்தேகத்தின் பேரில் அரசு டாஸ்மாக் சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்படவில்லை. ஆனால் அருகில் உள்ள மதுக்கூட பகுதியில் சென்று பார்த்த போது, சுவரில் துளை போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியஅடைந்தனர். பின் போலீசார் அளித்த தகவலின் பேரில் கடை விற்பனையாளர்கள் வந்து பார்த்தனர். மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட பணத்தை வீட்டிற்கு கொண்டு சென்றதால் பணம் தப்பியது என, விற்பனையாளர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை