உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ரசாயன உரங்களை தவிருங்கள் வேளாண் அதிகாரி ஆலோசனை

 ரசாயன உரங்களை தவிருங்கள் வேளாண் அதிகாரி ஆலோசனை

திருத்தணி: ரசாயன உரங்களை தவிர்த்து, தக்கைப்பூண்டு வளர்த்தால் மண்வளம் பாதுகாக்கப்படும் என, திருத்தணி வேளாண் உதவி இயக்குநர் பிரேம் ஆலோசனை வழங்கினார். திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். விவசாயிகள் நெல், வேர்கடலை, கரும்பு, சவுக்கு மற்றும் காய்கறி போன்றவற்றை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், பயிர்களுக்கு ரசாயன உரம் பயன்படுத்துவதால், மண்புழுக்கள் மற்றும் மண்வளம் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, வேளாண் துறை சார்பில், இயற்கை உரம் பயன்படுத்த வேண்டும் என, விவசாயிகளிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து, திருத்தணி வேளாண் உதவி இயக்குநர் பிரேம் கூறியதாவது: விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய வேண்டும். முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க, பயிரிடுவதற்கு முன் நிலத்தில் தக்கைப்பூண்டு பயிரிட வேண்டும். இதற்காக விவசாயிகளுக்கு, 1 கிலோ தக்கைப்பூண்டு விதை, 50 சதவீத மானியத்தில், 49.50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. 1 ஏக்கர் நிலத்திற்கு, 20 கிலோ விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தக்கைப்பூண்டு விதைத்து, 45 நாட்களில் நிலத்தை உழ வேண்டும். இந்த தக்கைப்பூண்டால், பயிரின் மகசூல் அதிகரிப்பதுடன், மண்ணின் தரம் குறையாமல் இருக்கும். எனவே, விவசாயிகள் ரசாயன உரத்தை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை