உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம்

சாலையில் கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம்

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரம் கிராமம், முஸ்லிம் நகர் பகுதியில் சேகரமாகும் குப்பை அரக்கோணம் சாலையில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் கொட்டப்பட்டு வந்த நிலையில், குப்பை தொட்டி பழுதடைந்தது.இதனால் அப்பகுதியில் சேகரமாகும் குப்பையை பகுதிவாசிகள் சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. சிலர் மருத்துவ கழிவுகளும் கொட்டி செல்வதால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ