| ADDED : ஜன 29, 2024 06:45 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் போலீஸ் பூத் நிறுவப்பட்டது. அந்த போலீஸ் பூத் நிறுவப்பட்ட இடத்தில் கால்வாய் பணிகள் விடுபட்டு போனது.இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன், போலீஸ் பூத்தின் பக்கவாட்டு சுவர்கள் இடிக்கப்பட்டு கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாதத்தில் கால்வாய் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், ஐந்து மாதங்களாக இடித்த சுவர்கள் மீண்டும் அடைக்கப்படாமல் உள்ளன.இதனால், பஜார் பகுதிக்கு வரும் சிலர், அந்த போலீஸ் பூத்தை சிறுநீர் கழிக்க பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதால், அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் துாய்மை பணிகள் மேற்கொண்டு தற்காலிகமாக அந்த சுவரை அடைத்து, மாணவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். போலீஸ் பூத் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.