| ADDED : டிச 01, 2025 03:38 AM
திருவள்ளூர்: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்காற்றியோர், 'பசுமை சாம்பியன்' விருது பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஆண்டுதோறும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பை செய்ய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு, பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம், ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 பேருக்கு, தலா 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பசுமை சாம்பியன் விருதிற்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்மாதிரியான பங்களிப்பை செய்த அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், www.tntiruvallurawards.comஎன்ற இணையதளத்தில், ஜன., 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த நகலுடன், இரண்டு பிரதிகளுடன், கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு, திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை அணுக லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.