| ADDED : நவ 22, 2025 02:07 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்ட நிதியின் கீழ், 1.38 கோடி ரூபாய் செலவில் சிமென்ட் கல் சாலை அமைக்க, கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெரு, ஜெய்ஹிந்த் நகர் இரண்டாவது குறுக்கு தெரு, மணியக்கார தெரு, மேட்டு காலனி, திருவள்ளூர் நகர்களில் தெருக்கள் சேதடைந்துள்ளன. இங்கு, சிமென்ட் கல் சாலை அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது. பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியின் மூலம், 1.38 கோடி ரூபாய் செலவில், இப்பகுதிகளில் சிமென்ட் கல் சாலை அமைக்க, திருவள்ளூர் கலெக்டரின் ஒப்புதலுக்கு பேரூராட்சி நிர்வாகம் அனுப்பியது. நிர்வாக அனுமதி பெற்றவுடன் பணிகள் துவங்கப்படும் என, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.