உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

திருத்தணி: திருத்தணி பழைய தர்மராஜா கோவில் பின்புறம் பகுதியில் வசிப்பவர் நாராயணன் மனைவி பிரசாந்தி, 32. இவர் நேற்று மதியம், அரசு மருத்துவமனை அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வரும் மகன்களுக்கு மதிய உணவு பள்ளிக்கு கொண்டு சென்றார்.உணவு கொடுத்துவிட்டு ரயில்வே பாலம் சதாசிவ லிங்கேஸ்வரர் சுவாமி கோவில் வழியாக வீட்டிற்கு நடந்து வந்த போது, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணிந்து வந்த இரு இளைஞர்கள், திடீரென பிரசாந்தி கழுத்தில் அணிந்திருந்த, 6 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து பிரசாந்தி கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி