உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சென்னை பஸ் செயலி ஐபோனிலும் அறிமுகம்

சென்னை பஸ் செயலி ஐபோனிலும் அறிமுகம்

சென்னை, சென்னை பஸ் செயலியை ஐபோனிலும் பயன்படுத்தும் வசதியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார்.சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், பேருந்துகளின் வருகை நேரம், வந்து கொண்டு இருக்கும் இடம் உள்ளிட்ட விபரங்களை பயணியர் தெரிந்து கொள்ளும் வகையில், 'சென்னை பஸ்' என்ற செயலி, கடந்த ஆண்டு மே மாதத்தில் துவங்கப்பட்டது. இந்த செயலியை, ஐபோனிலும் பெறும் வகையில் கொண்டுவர பயணியர் கோரிக்கைவிடுத்தனர். இதன்படி ஐபோனிலும் இந்த செயலியை பயன்படுத்தும் வகையிலான, 'ஐஓஎஸ் வெர்சன்' தயாரானது. இதை, தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர் சிவசங்கர் பயன்பாடிற்கு துவங்கி வைத்தார்.இதன் வாயிலாக, பேருந்து நிறுத்தங்களின் விபரம், நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருக்கும் பேருந்துகளின் விபரங்களை நேரப்படி அறிந்து கொள்ளலாம். மேலும், அவசர மற்றும் பாதுகாப்பு செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உடனே ஒரு பொத்தான், அழுத்தி தெரிவித்துக் கொள்ளும் வகையில் இந்த செயலி அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை