உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுணியம் - ஆங்காடு சாலை சேதம்; வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சிறுணியம் - ஆங்காடு சாலை சேதம்; வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சோழவரம் : சோழவரம் அடுத்த சிறுணியம் - ஆங்காடு கிராமத்திற்கு இடையேயான சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை முழுதும் சரளைக் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் வாகனங்கள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றன.சாலையில் உள்ள பள்ளங்களை தவிர்க்க, வாகனங்கள் வளைந்து வளைந்து செல்லும்போது, எதிரில் வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர்.இரவு நேரங்களில் சாலைப்பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி சிறுசிறு விபத்துகளை சந்திக்கின்றனர். மேலும், பெயர்ந்து கிடக்கும் சரளைக் கற்கள் மீது, கனரக வாகனங்கள் பயணிக்கும்போது புழுதி பறப்பதால், அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இந்த சாலையானது ஒரக்காடு - அருமந்தை சாலை நெடுஞ்சாலையில் இணைவதால், தொடர் வாகன போக்குவரத்து இருக்கிறது. வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.இதர மாவட்ட சாலைகள் பிரிவில் உள்ள இதை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ