மேலும் செய்திகள்
வர்ணம் பூசாத வேகத்தடை அச்சத்தில் வாகன ஓட்டிகள்
24-Mar-2025
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம் மற்றும் இணைப்பு சாலை வழியே, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த நெடுஞ்சாலை வழியாக, தினமும் 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், இச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் இடையே, 32 கி.மீ., துாரத்திற்கு, தார்ச்சாலை அமைக்க, 32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. ஊத்துக்கோட்டை பேரூராட்சி, அம்பேத்கர் நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், சாலையின் ஒரு பக்கம் பள்ளமான இடத்திற்கு, அருகே உள்ள சுடுகாட்டு சுற்றுச்சுவர் ஒட்டியுள்ள மண்ணை எடுத்து சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது.இதனால், 14.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுடுகாட்டு சுற்றுச்சுவர் சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. சாலை பணிக்கு உரிய பணம் கொடுத்து, அதை முறையாக செலவழிக்காமல், இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.எனவே, கலெக்டர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24-Mar-2025