உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குறைவான பஸ்களால் ஆபத்தான பயணம்

குறைவான பஸ்களால் ஆபத்தான பயணம்

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம் ஊராட்சி.போளிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள வலசைவெட்டிக்காடு, இலுப்பூர், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மேல்நல்லாத்துார், மணவாள நகர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.இப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் போதிய பேருந்துகள் இயங்காததால் மாணவ - மாணவியர் பள்ளி, கல்லுாரி செல்லும் நேரங்களில் கடும் சிரமப்பட்டு படிக்கட்டில் தொங்கியபடி அபாய நிலையில் பயணம் செய்கின்றனர்.இலவச பயண அட்டை இருந்தும் சில நேரங்களில் பணம் கொடுத்து ஷேர் ஆட்டோக்களில் செல்லும் நிலையும் ஏற்படுகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்வழித்தடத்தில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை