| ADDED : டிச 27, 2025 06:07 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் நீதிமன்றத் தில் ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுத்த இருவரை, தேடப்படும் குற்ற வாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், பெரியகுப்பத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, கடந்த 1997 ஜன., 1ம் தேதி திருவூர் பகுதியைச் சேர்ந்த மோகன், 40, என் பவர், சைக்கிளுக்கு பஞ்சர் போட வந்த போது ஏற்பட்ட தகராறில், அவரை தாக்கி கடையை சேதப் படுத்தினார் . மற்றொரு சம்பவம் திருவள்ளூரைச் சேர்ந்த சுரேஷ், கடந்த 2006 ஜூன் 25ம் தேதி, தன் டீக் கடையை மூடி விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த ஆந்திர மாநிலம் சித்துாரைச் சேர்ந்த விஜய், 45, என்பவர், சுரேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி, 150 ரூபாய் பணம் மற்றும் வாட்ச்சை பறித்து சென்றார். இதுகுறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்குகளில், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருவரும் தலைமறைவாக உள்ளனர். நேற்று திருவள்ளூர் குற்ற வியல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நீதிபதி சுனில்வினோத், குற்றம் சாட்டப்பட்ட மோகன் மற்றும் விஜய் ஆகிய இரு வரையும் தேடப்படும் குற்ற வாளிகளாக அறிவித்தார்.