உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதில் தகராறு : மூவரை வெட்டிய ரவுடிக்கு காப்பு

 அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதில் தகராறு : மூவரை வெட்டிய ரவுடிக்கு காப்பு

சோழவரம்: செங்குன்றம், ஜோதி நகரைச் சேர்ந்தவர் சுரேந்தர், 34. இவர், சோழவரம் அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியில் பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரது நண்பர்கள் ஆட்டந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ராம்கி, 28, மற்றும் பாலகணேசன் நகரைச் சேர்ந்த ஆல்பர்ட், 26. கடந்த 11ம் தேதி சுரேந்தர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பஞ்சர் கடைக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம், 42, கூட்டாளிகளுடன் அங்கு வந்து, சுரேந்தர் தரப்பினரிடம், 'இது எங்களுடைய இடம், நீங்கள் ஏன் சுத்தம் செய்கிறீர்கள்' எனக்கேட்டு தகராறு செய்தார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பாலசுந்தரம் கையில் வைத்திருந்த கத்தியால், மூவரையும் தலை மற்றும் கைகளில் வெட்டிவிட்டு தப்பினார். காயமடைந்த மூவரும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து, மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். நேற்று, சோழவரம் அடுத்த நல்லுாரில் பதுங்கியிருந்த பாலசுந்தரத்தை கைது செய்தனர். இவர் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது விசாரணையில் தெரிய வந்தது. பாலசுந்தரத்தின் கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை