உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மாவட்ட டேபிள் டென்னிஸ் ஸ்ரீநிகேதன் பள்ளி அசத்தல்

 மாவட்ட டேபிள் டென்னிஸ் ஸ்ரீநிகேதன் பள்ளி அசத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட டேபிள் டென்னிஸ் 'புரமோஷன் லீக்' போட்டியில், 14 வயது மாணவன் சாம்பியன் பட்டம் வென்றார். திருவள்ளூர் பூங்கா நகரில் உள்ள ௦யில், மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில், மாவட்டம் முழுதும் உள்ள பல்வேறு பள்ளி களில் இருந்து, 100 விளையாட்டு வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், ஸ்ரீநிகேதன் பள்ளியைச் சேர்ந்த 14 வயது மாணவன் மித்ரன் சாம்பியன் பட்டம் வென்றார். அனைத்து பிரிவுகளிலும், முதல் இரண்டு இடங்களை பிடித்தோருக்கு கோப்பை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை