உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாலிபர்களிடம் ரூ.10 லட்சம் வசூலித்த டம்மி போலீஸ்

வாலிபர்களிடம் ரூ.10 லட்சம் வசூலித்த டம்மி போலீஸ்

வியாசர்பாடி:கொடுங்கையூர், எம்.ஆர்.நகர், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 24; மருத்துவ பிரதிநிதி.இவரது நண்பர் பிரவீன்குமார் என்பவர், அவசர உதவிக்காக ஜன., 5ம் தேதி, 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க நேற்று, மணிகண்டனை பிரவீன்குமார் அழைத்துள்ளார்.மணிகண்டன் செல்ல முடியாத சூழல் இருந்ததால், தன் மைத்துனரான கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த மற்றொரு மணிகண்டன், 21, என்பவரை பணம் வாங்கி வர அனுப்பியுள்ளார்.மேற்படி மணிகண்டன், தன் நண்பர் ஒருவருடன் பட்டாளம் சென்று, பிரவீன்குமாரிடம் 10 லட்சம் ரூபாய் வாங்கி, 'ஸ்கூட்டர் டிக்கி'யில் வைத்துக் கொண்டு திரும்பினார்.பேசின்பாலத்தைக் கடந்து வியாசர்பாடி, எருக்கஞ்சேரி மேம்பாலம் வழியாக வந்த போது, இரு பைக்கில் வந்த நால்வர், இவர்களை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.தங்களை போலீஸ் எனக் கூறி, மணிகண்டனின் மொபைல்போனை பறித்ததுடன், ஸ்கூட்டர் டிக்கியை திறக்க வைத்துள்ளனர். அதிலிருந்த 10 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, 'இந்த பணம் யாருடையது' எனக் கேட்டுள்ளனர். பின், 'போலீஸ் ஸ்டேஷனில் வந்து எழுதிக் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்' எனக் கூறியபடி, மணிகண்டனின் ஸ்கூட்டர் சாவியை எடுத்துக் கொண்டு, நால்வரும் தப்பியுள்ளனர். இதுகுறித்து, வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி