உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொட்டி ரெடியாகியும் தண்ணீர் இல்லை தண்டலத்தில் அவதி

தொட்டி ரெடியாகியும் தண்ணீர் இல்லை தண்டலத்தில் அவதி

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது தண்டலம் ஊராட்சி. இங்கு 2021-22ல் 17 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.அருகிலேயே குடிநீர் நீர்ரேற்றும் அறையும் கட்டப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி கட்டப்பட்டு ஓராண்டாகியும் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து பலமுறை ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென தண்டலம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ