உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புறம்போக்கு நிலத்தில் விவசாயம் காக்கவாக்கத்தில் சாலை மறியல்

புறம்போக்கு நிலத்தில் விவசாயம் காக்கவாக்கத்தில் சாலை மறியல்

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பிர்கா, காக்கவாக்கம் கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் முக்கியத் தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு. கால்நடைகளின் தீவனத்திற்காக அப்பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இதை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதை அகற்ற வேண்டி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றி எச்சரிக்கை பலகை வைத்தனர்.ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள், எச்சரிக்கை பலகையை அகற்றி விட்டு மீண்டும் பயிரிட்டு வருகின்றனர். இதனால் கால்நடைகளுக்கு தீனி கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் நெடுஞ்சாலையில், காக்கவாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. ஊத்துக்கோட்டை தாசில்தார் வாசுதேவன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினர்.இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் மீண்டும் பயிரிடாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் வாசுதேவன் கூறினார். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை