| ADDED : நவ 22, 2025 02:09 AM
மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு மேட்டுக்காலனியைச் சேர்ந்தவர் ரஞ்சித், 25. இவர், நேற்று முன்தினம், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாவது: தோட்டக்காடு மேட்டுக் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவரை ரஞ்சித் காதலித்து ஏமாற்றிதால், நான்கு மாதங்களுக்கு முன், அப்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால், இறந்த பெண்ணின் தாய்மாமன் தினேஷ், ரஞ்சித் மீது கோபத்தில் இருந்தார். இந்நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து, ரஞ்சித்தை வெட்டி கொலை செய்துள்ளார். இவ்வாறு அதில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அதே கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், 29, விஷால், 23, நவீன்ராஜ், 27, விக்னேஷ், 28, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.