உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம், கடந்த ஜன. 15 முதல் ஒரு மாதம் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும், மாவட்டம் முழுதும், பள்ளிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில், போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.மேலும், நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது, போக்குவரத்து துறையினர் சோதனை நடத்தி, உரிய ஆவணம் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதித்து, ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.நேற்று, 25வது நாளை ஒட்டி, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடந்தது. திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.மோகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோ.மோகன் முன்னிலை வகித்தனர்.கலெக்டர் பிரபுசங்கர், எஸ்.பி., சீனிவாசப்பெருமாள் ஆகியோர் முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டனர். இதில், 200க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.நிகழ்ச்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்கிய ஓட்டுனர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை