உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளி மாணவர்கள் மோதல்

அரசு பள்ளி மாணவர்கள் மோதல்

திருத்தணி: திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் புச்சிரெட்டிப்பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனை, கிருஷ்ணசமுத்திரம் காலனி பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் இருவர் முன்விரோதம் காரணமாக பள்ளி வளாகத்திலேயே கையால் தாக்கினர்.இதையடுத்து ஒன்பதாம் வகுப்பு மாணவன், பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து பச்சைய்யப்பன் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இருவர், பிளஸ் 1 மாணவர்கள் இருவரை தாக்கினர். இதையடுத்து இரு தரப்பினரும் தனது ஆதரவாளர்களுடன் மோதிக் கொண்டனர். இதில் கல்லுாரி மாணவர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 10க்கும் மேற்பட்டோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை