உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட ஹாக்கியில் அபாரம்

அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட ஹாக்கியில் அபாரம்

திருவொற்றியூர்:பள்ளிக் கல்வித்துறை சார்பில், நேற்று முன்தினம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில், சின்னசேக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று, அபாரமாக விளையாடினர்.இறுதிப்போட்டியில் அண்ணா சாலை, மதர்ஷா மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னசேக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இப்போட்டியில் யாரும் கோல் அடிக்காததால், 'டைபிரேக்கர்' முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 3 - 1 என்ற புள்ளிக் கணக்கில், சின்னசேக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதன்மூலம், புதுக்கோட்டையில், பிப்., 5 முதல் 7ம் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு, சின்னசேக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற அணியினரை, பள்ளி தலைமை ஆசிரியை உஷா, பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் லுாயிஸ் உள்ளிட்ட ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை