மேலும் செய்திகள்
சேதமடைந்த நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
41 minutes ago
வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் படுமோசம்
50 minutes ago
600 லிட்டர் சாராயம் பறிமுதல்
22 hour(s) ago
கும்மிடிப்பூண்டி: அம்பேத்கர் உருவப்படத்தை அகற்றியதை கண்டித்து நேற்று, கும்மிடிப்பூண்டி வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்றம் சார்பில், 2023ம் ஆண்டு அனைத்து தமிழக நீதிமன்றங்களுக்கு வழிகாட்டுதல் ஒன்றை அனுப்பியது. அதன்படி, நீதிமன்றத்தில் மஹாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவ படங்களை தவிர்த்து மற்ற படங்களை வைக்கக் கூடாது என, தெரிவித்திருந்தது. கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில், அம்பேத்கர் உருவ படம் இருப்பதாக கிடைக்கப்பட்ட புகாரின்படி, அம்பேத்கரின் படம் அகற்றப்பட்டது. இதை கண்டிக்கும் விதமாக, கும்மிடிப்பூண்டி வக்கீல்கள் சங்கம் சார்பில், நேற்று நீதிமன்றம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.
41 minutes ago
50 minutes ago
22 hour(s) ago