உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

 தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் வேளாண்மை துறையில் உழவர்களை பாதிக்கும் களப்பணியாளர்கள் இணைப்பு திட்டத்தை கைவிட கோரி, தோட்டக்கலைத்துறையினர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு கடந்த 2023ம் ஆண்டு வேளாண்மைத்துறையில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மைத்துறையில் விற்பனை, வணிகம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளை ஒருங் கிணைக்க உத்தரவிட்டது. இதையடுத்து மேற்கண்ட துறையில் பணியாற்றி வரும் களப்பணியாளர்களை முதல் கட்டமாக ஒன்றிணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் உழவர்கள் பாதிக்கும் நிலை ஏற்படுமென எதிர்ப்பு தெரிவித்து நேற்று திருவள்ளூரில் தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டக்கலை துணை அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் ஷீலா தேவி முன்னிலையில் வகித்தார். களப்பணியாளர்கள் இணைப்பு திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழக அரசைக் கண்டித்து தோட்டக்கலை நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ