உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வடாரண்யேஸ்வரர் கோவிலில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

 வடாரண்யேஸ்வரர் கோவிலில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் வகையில் விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர், வெளியூர்களில் இருந்து தினமும் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல், இக்கோவிலின் முக்கிய விழா நாட்களான பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி போன்ற நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். மேலும், வாரந்தோறும் சனிக்கிழமை மாந்தீஸ்வரர் பூஜையில் 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்குவதற்கு போதிய விடுதி வசதி இல்லாததால், தனியார் விடுதிகளில் தங்க வேண்டியுள்ளது. இதை பயன்படுத்தி, தனியார் தங்கும் விடுதியில் அதிக பணத்தை வசூலிப்பதாக புலம்புகின்றனர். இதன் காரணமாக, இரவில் தங்க முடியாமல் தரிசனம் முடிந்ததும், அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விடுகின்றனர். எனவே, பக்தர்களின் நலன் கருதி, வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட இடத்தில் குளியலறையுடன் கூடிய விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை